LEU3307 -  இலங்கைசார் கற்கைகள் என்ற  இப்பாடநெறியானது, தெரிவுக்குரிய  பாடமாகும். இது   இலங்கையின் அமைவிடம், காலநிலை, தரைத்தோற்றம், வளப்பரம்பல், சனத்தொகை பரம்பல், 1948 - 1977 காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி, 1977 தொடக்கம் தற்போதைய காலப்பகுதி வரையிலான இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்பன பற்றியும், இலங்கையின் காலனித்துவ கால அரசியலமைப்பு வளர்ச்சி, ஆங்கிலேயர்களால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் (1796 – 1948), சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசியலமைப்பின் வளர்ச்சி, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் கல்விச் சீர்த்திருத்தங்கள் எனும் விடயங்கள் பற்றியும் மாணவர்களுக்குத் தெளிவான விளக்கத்தினை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு அமைகின்றது.