LEU3301 - தமிழ் மொழி - ஓர் அறிமுகம் என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 01, பருவம் - 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் நீங்கள் மொழி பற்றிய அறிமுகம், மனித மொழியின் தனித்துவமான அம்சங்கள், மொழி - கலாசாரம் - சமூகம், மொழிக்குடும்பம், சிறப்பாக தமிழ் மொழி உருவாக்கம் மற்றும் அதன் சிறப்புக்கள் பற்றி விரிவான விளக்கத்தினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
- Teacher: Lakdinie Thambavita
LEU3302 - தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம் I என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 01, பருவம் - 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இக்கற்கைநெறியானது, செவ்வியல் இலக்கியம் பற்றிய அறிமுகம் அதன் வரலாற்றுப் பின்னணி அத்துடன் நவீன இலக்கிய கவிதை, புனைகதை படைப்பாளிகள் பற்றிய விளக்கமும், உரைநடை வளர்ச்சி பற்றியும் இப்பாடநெறி தெளிவான விளக்கத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
- Teacher: Lakdinie Thambavita
LEU3303 - தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம் II என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 01இ பருவம் - 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இப்பாடநெறியானது, சங்க, சங்கமருவிய, பல்லவர், சோழர் கால நூல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் பற்றியும் நவீன இலக்கியத்தில் பாரதியார் பாடல்கள் பற்றியும் தெளிவான விளக்கத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இப்பாடநெறி அமைகின்றது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
- Teacher: Lakdinie Thambavita
LEU3304 - தமிழ்க் கல்வெட்டியல் - ஓர் அறிமுகம் என்ற இந்த பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 01, பருவம் - 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. கல்வெட்டுகளின் வரலாறு பற்றியும் அதில் தமிழ் பிராமிக் கல்வெட்டு, வட்டெழுத்து, தமிழி மற்றும் தமிழ் எழுத்து, தமிழ் வரிவடிவம் ஆகியவை பற்றியும், அத்துடன் தமிழ்க் கல்வெட்டியலின் வரலாறும், இலங்கைத் தமிழ் சாசனங்கள் பற்றியும், அவற்றை சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தில் விளங்கிக்கொள்வது பற்றியும் தெளிவான விளக்கத்தினை வழங்கும் நோக்கில் இப்பாடநெறி அமைக்கப்பட்டுள்ளது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
LEU3305 - தமிழில் எழுத்தாக்க நுட்பங்கள் - ஓர் அறிமுகம், என்ற இந்த பாடநெறி ஒரு தெரிவுக்குரிய பாடமாகும். இது மட்டம் 01, பருவம் - 01 இல் மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. ஆக்கத்திறன் நுட்பங்கள் குறித்த பொதுவானதோர் அறிமுகத்தையும் கவிதை, நாடகம், சிறுகதை ஆகிய எழுத்தாக்கங்கள் தமிழ்ச் சூழலில் தோன்றித் தொடர்ந்த முறைமைகளையும், தமிழின் செவ்வியலிலக்கியங்களில் காணப்படும் எழுத்தாக்க நுட்பங்களையும், நவீன இலக்கியப்படைப்புகளும் அதன் சிறப்புகளையும் சில நலீன கோட்பாட்டு முறைகளையும் விளங்கிக்கொள்ளுமுகமாக இப்பாடநெறி அமைக்கப்பட்டுள்ளது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
LEU3306 -அறிவியல் தமிழ் என்ற இப்பாடநெறியானது தெரிவுக்குரிய பாடமாகும். இது அறிவியல் தமிழ் பற்றிய அறிமுகம், தமிழர்களின் கலாசாரப் பண்பாடுகளில் அறிவியலின் செல்வாக்கு, சிந்துவெளி நாகரிகத்தில் தொழில்நுட்ப அறிவியல், பழந்தமிழர்களின் ஆடைத்தொழில்நுட்ப அறிவியல், பழந்தமிழர்களின் வேளாண்மைத்தொழில்நுட்ப அறிவியல், பழந்தமிழர்களின் உணவு முறைகள், பழந்தமிழர்களின் மருத்துவ அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறையில் அறிவியல் தமிழின் செல்வாக்கு, பல்வேறு துறைகளில் அறிவியல் தமிழ், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அறிவியல் அறிஞர்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவான விளக்கத்தினை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு அமைகின்றது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
LEU3307 - இலங்கைசார் கற்கைகள் என்ற இப்பாடநெறியானது, தெரிவுக்குரிய பாடமாகும். இது இலங்கையின் அமைவிடம், காலநிலை, தரைத்தோற்றம், வளப்பரம்பல், சனத்தொகை பரம்பல், 1948 - 1977 காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி, 1977 தொடக்கம் தற்போதைய காலப்பகுதி வரையிலான இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்பன பற்றியும், இலங்கையின் காலனித்துவ கால அரசியலமைப்பு வளர்ச்சி, ஆங்கிலேயர்களால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் (1796 – 1948), சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசியலமைப்பின் வளர்ச்சி, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் கல்விச் சீர்த்திருத்தங்கள் எனும் விடயங்கள் பற்றியும் மாணவர்களுக்குத் தெளிவான விளக்கத்தினை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு அமைகின்றது.

- Teacher: Dr Kala Chandramohan
- Teacher: Thevagowry Mahalingasivam Surendran
- Teacher: Lakdinie Thambavita