LEU3313 - 'தமிழ் அகராதியியல்' என்ற இப்பாடநெறி ஒரு தேர்வுக்குரிய பாடமாகும். இது மட்டம் 3 பருவம் 2 இல் மூன்று திறமைமட்டங்களைக் கொண்டது. இதில் நீங்கள் அகராதி என்ற சொல்லின் விளக்கம், அகராதியியல் - அகராதிக்கலை இரண்டினதும் வேறுபாடு, அகராதிகளின் பொது அமைப்புப் பற்றியும் அகராதிகளைப் பயன்படுத்துதலோடு அகராதியின் மூலம் கிடைக்கும் பயன்கள் பற்றியும் விரிவாக  கற்கமுடியும். அத்துடன் அகராதி வரலாறு, அகராதி வகைகள், அகராதி உருவாக்க முறைகள் ஆகியவற்றை முழுமையாக கற்றறிந்து , இறுதியில் அகராதி ஒன்றினை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட வழிப்படுத்தப்படுவீர்கள்.