LEU3308 – மொழியும் தொடர்பாடலும்(Language and Communication) என்ற இந்தப் பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 03, பருவம் - 02 இல்  மூன்று திறமை மட்டங்களைக் கொண்டுள்ளது. இப் பாடநெறி உங்களுக்குத் தொடர்பாடல் பற்றிய விளக்கத்தைத் தருவதாகவும் மொழிக்கும் தொடர்பாடலுக்குமிடையிலான தொடர்பை விளக்குவதாகவும் அமையும். அதில் தொடர்பாடல் எவ்வாறு நிகழ்கின்றது? தொடர்பாடற் செயன்முறையின் உட்கூறுகள் பற்றிய விளக்கங்களும் தொடர்பாடற் திறன்கள் பற்றிய விபரிப்பும் விளக்கப்பட்டுள்ளன. அத்துடன் தொடர்பாடலில் ஏற்படும் தடைகள் அத்தடைகளை நீக்கும் வழிமுறைகள் போன்றவற்றையும் அறியமுடியும். மேலும் அடிப்படை மொழித்திறன்கள் என்றால் என்ன? அடிப்படை மொழித்திறன்கள் எவை? என்பன பற்றிய விரிவான விளக்கங்களையும் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.