LEU 3314  - இலங்கையில் மொழிக்கொள்கை என்ற இப்பாடநெறி ஒரு தேர்வுக்குரிய பாடமாகும்.  இது மட்டம் 3 பருவம் 2 இல் மூன்று திறமைமட்டங்களைக் கொண்டது. இதில் நீங்கள் மொழிச்சட்டக்கொள்கையை விளங்கிக்கொள்வதன் வழி இலங்கையின் மொழிக்கொள்கை தொடர்பான வரலாற்றுக் காலகட்ட ரீதியான சட்ட உருவாக்கங்களையும் அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் தெரிந்துகொண்டு ஒரு மொழியின் நிலைத்திருப்புத் தன்மைக்கான மொழிச்சட்டக்கொள்கையின் அவசியத்தினைப் புரிந்துகொள்ளமுடியம். அத்துடன் மொழி உரிமைகள் மீறப்படுதல் தொடர்பாக அரச நிர்வாக மற்றும் சட்ட நிறுவனங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய பரிகாரங்கள் என்பன குறித்தும் அறிந்துகொள்ளமுடியும்.