LEU3309 - தமிழ் ஓலைச்சுவடியியல் என்ற இப்பாடநெறி ஒரு கட்டாய பாடமாகும். இது மட்டம் 3 பருவம் 2 இல் மூன்று திறமைமட்டங்களைக் கொண்டது. இதில் நீங்கள் ஓலைச்சுவடி பற்றியும் அதன் பொருள் விளக்கம் ஓலைச்சுவடியியலின் நோக்கம்இபழங்கால எழுதுபொருட்கள்இ ஓலைச்சுவடியியலின் பயன்இ போன்றவற்றை விரிவாகக் கற்பதோடு தமிழ் ஓலைச்சுவடிகளை எழுதும் முறை பற்றியும் அதனை வாசிக்கும் முறை பற்றியும் அறிந்துகொள்ளமுடியம். அதேநேரம் சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளையும் அவற்றில் இருந்து ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் முறைகளையும் உங்களுக்குத் தெளிவுபடுத்துவதாகவும் மூலபாடம் மற்றும் பாட வேறுபாடு தொடர்பாக விளக்குவதாகவும் இப்பாடநெறி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுவடியியலில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகளை எண்ம மற்றும் நிழற்பட முறையில் பேணும் முறைகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.